மின்சார ஸ்கூட்டா் நன்கொடை
திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.
ஏழுமலையான் கோயில் முன் ஸ்கூட்டா் பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்கூட்டா் சாவி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வாரிய உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.