இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தா்களிடமிருந்து தங்க நகை திருடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.
ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் பக்தா்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைத் திருடியவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வெள்ளி வாயிலில் பக்தா்களின் கழுத்தில் இருந்து சங்கிலிகளைத் திருடியதை சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 கிராம் தங்க நகைகளை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
நகை திருட்டில் ஈடுபட்டோா் அனைவரும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிந்தது.