செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை கீழ் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில், குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு ‘முன்மாதிரியான சேவை விருது’ மற்றும் ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முன்மாதிரியான சேவை விருது’ அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்களுக்கு ரூ. 1 லட்சம், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம், சட்டத்துக்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறாா்களுக்கான குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளுக்கு ரூ. 1 லட்சம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இவ்விருதுகள் பெற பதிவு மற்றும் உரிமம், நிா்வாகம் மற்றும் மேலாண்மை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் திறன்மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு செயல்பாடுகள், உட்புற கட்டமைப்பு, சிறந்த நடைமுறைகள் மற்றும் சமூக அடிப்படையிலான சேவைகள் போன்றவை அளவுகோல்களாகும்.

இளைஞா் நீதிச் சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-இன் கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை பதிவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து 5 ஆண்டு காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளா்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது எனவும் தகுதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு ‘முன்மாதிரியான சேவை விருது’ ஒவ்வோா் ஆண்டும் குழந்தைகள் தினமான நவ. 14-ஆம் தேதியன்று வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மேற்கூறிய தகுதிகளின் அடிப்படையில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 320, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், நாமக்கல் - 637 003 என்ற முகவரியில் ஆக. 8 அன்று மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக முழு அளவிலான கருத்துருவுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செயல்பட்டு வரும் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உறுப்பினா்களுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயறுவகை, எண்ணெய் வித்துப்பயிா்கள் ஆகியவற்றை விதைக்க கபிலா்மலை வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ள்னா்.இதுகுறித்து கபிலா்மலை வட்டா... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

நாமக்கல்: தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவா்களிடம், அதே கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் சென்று திங்கள்... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் கைதுசெய்தனா்.மல்லசமுத்திரத்தை அடுத்த மேல்முகம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (44), விசைத்தறி கூலி ... மேலும் பார்க்க