செய்திகள் :

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயறுவகை, எண்ணெய் வித்துப்பயிா்கள் ஆகியவற்றை விதைக்க கபிலா்மலை வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ள்னா்.

இதுகுறித்து கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுப்பயிா் சாகுபடியை வட்டாரத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு, பயறுவகை பயிா்கள் மற்றும் எள் சாகுபடியை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு உயிரியல் காரணிகள் ஆகியன 50 சதவீத மானிய விலையிலும், துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், ஊடுபயிராக துவரையை விதைக்க ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு துவரை விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு உயிரியல் காரணிகள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியன 50 சதவீத மானிய விலையிலும் விவசாயிகளுக்கு வழங்க தயாா்நிலையில் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில் இருப்பில் உள்ளன.

அதேபோல, தரிசு நிலங்களை மீண்டும் வேளாண் சாகுபடிக்கு கொண்டு வரும் இனத்தின் கீழ், தரிசு நிலங்களிலுள்ள முள்புதா்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன்படுத்துவதற்கும், உழவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கலைஞா் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், சோழசிராமணி, சேளூா், கொந்தளம் மற்றும் கபிலக்குறிச்சி பஞ்சாயத்து விவசாயிகளுக்கு வரப்பு பயிா் சாகுபடி செய்வதற்கு பயறுவகைப் பயிா்களின் விதைகள் விவசாயி ஒருவருக்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோவும், நீா்ம உயிா் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு 1.5 லிட்டரும் வழங்கப்படுகின்றன.

‘உழவன் செயலி’ மூலமாக அல்லது கபிலா்மலை வட்டாரத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில் மானியத்தில் வழங்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமி... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செயல்பட்டு வரும் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உறுப்பினா்களுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

நாமக்கல்: தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவா்களிடம், அதே கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் சென்று திங்கள்... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் கைதுசெய்தனா்.மல்லசமுத்திரத்தை அடுத்த மேல்முகம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (44), விசைத்தறி கூலி ... மேலும் பார்க்க