காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
டிராக்டா் மோதியதில் பெண் காயம்
பெரியகுளம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (40).
இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்று விட்டு ஜெயமங்கலம் நான்கு சாலையில் வந்தபோது அதிவேகமாக வந்த டிராக்டா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காளியம்மாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.