இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.
அவா் வைத்திருந்த பெட்டியை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் 29 மதுப் புட்டிகள் இருந்தன. விசாரணையில், அந்த நபா் சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்த ராஜலிங்கம் (36) என்பதும், சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.