இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு
பரோலில் வந்த கைதி மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்தைச் சோ்ந்த சீதாராமன் மகன் முத்துகிருஷ்ணன் (45). இவா் கொலை வழக்கு ஒன்றில், ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறாா்.
இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை சீதாராமனைப் பாா்ப்பதற்காக சிறையிலிருந்து 6 நாள்கள் விடுப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியே வந்தாா். ஜூலை 31-ஆம் தேதி மாலை சிறையில் முன்னிலையாக வேண்டிய நிலையில், முத்துகிருஷ்ணன் சிறைக்குச் செல்லவில்லை.
இது குறித்து மதுரை மத்திய சிறை அலுவலா் ராஜேஷ் கண்ணா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணனைத் தேடி வருகின்றனா்