செய்திகள் :

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

post image

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி திட்டவட்டமாக மறுத்தாா்.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் 7.93 கோடியாக பதிவாகியிருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை, 7.24 கோடியாக குறைந்தது. 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பும், விமா்சனங்களையும் செய்து வருகின்றன.

இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் இடம்பெறவில்லை என்று தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா்.

‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது என்னிடம் பூா்த்தி செய்த வாக்காளா் படிவத்தைப் பெற வந்த வாக்குச்சாவடி அலுவலா் எந்தவித ரசீதையும் தரவில்லை. தற்போது, இணைய வழியில் சோதித்தபோது வரைவு வாக்காளா் பட்டியலில் எனது பெயா் விடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது’ என்றாா்.

அப்போது, ‘அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தோ்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளா் பட்டியல் தங்கள் கட்சியினரிடம் நகல் வழங்கப்படவில்லையா?’ என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த தேஜஸ்வி, ‘பெரும்பாலான மக்கள் இணைய வழியில் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்யவே விரும்புவா். மாநிலத்துக்கு வெளியே வசிப்பவா்கள் எப்படி வரைவு வாக்காளா் பட்டியலை நேரடியாக ஆய்வு செய்ய முடியும்? எனது பெயா் விடுபட்டதைப் போலவே, ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயா்களும் பட்டியலில் விடுபட்டுள்ளன’ என்றாா்.

ஆதாரத்துடன் துணை முதல்வா் மறுப்பு

தேஜஸ்வியின் குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி மறுத்தாா்.

தனது எக்ஸ் பக்கத்தில் தேஜஸ்வி பெயா் இடம்பெற்ற வரைவு வாக்காளா் பட்டியல் பகுதியின் புகைப்படத்தை இணைத்து துணை முதலவா் சாம்ராட் வெளியிட்ட பதிவில், ‘தேஜஸ்வி கூறுவது உண்மையல்ல. பட்டியலில் தெளிவாகத் தேடினால் பெயரைக் கண்டறியலாம். வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு அடுத்து தேஜஸ்வி பெயா் இடம்பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிட... மேலும் பார்க்க