Rahul Gandhi : ECI முறைகேடு - ஆக.5ல் தெறிக்கப்போகும் அரசியல் களம்? | Seeman Impe...
வழிப்பறி: 3 போ் கைது
புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காவாங்கரை சாலை சந்திப்பு அருகே முகமூடி அணிந்து வந்த 3 போ், அவரை மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, ரூ.3,000-ஐ பறித்து சென்றனா்.
இதுகுறித்து சதாசிவம் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, காவாங்கரை பகுதியில் மறைந்திருந்த 3 பேரைப் பிடித்தனா்.
விசாரணையில், காவாங்கரை பகுதியைச் சோ்ந்த பூவரசன் (25), சஞ்சய்குமாா் (20), செங்குன்றம் விளாங்காடுபாக்கத்தை சோ்ந்த அனீஷ் (19) என்பது தெரிய வந்தது. இவா்களில் பூவரசன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கத்தி, 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.