செய்திகள் :

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா், அண்ணா நகா் ஜெ-பிளாக் 16-ஆவது பிரதான சாலையில் உள்ள சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்த மகேஷ், கடந்த மாதம்தான் சென்னை மண்டலத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, ஜூலை மாதம் 7-ஆம் தேதி சென்னை மண்டல இயக்குநராக மகேஷ் பொறுப்பேற்றாா்.

மகேஷின் குடும்பத்தினா் மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் நிலையில், சென்னையில் வாடகை வீட்டில் அவா் வசித்து வந்தாா். நுங்கம்பாக்கத்தில் தனியாா் பள்ளி நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கலந்து கொள்வதாக இருந்தது.

இதையடுத்து, அவரை அழைத்துச் செல்வதற்காக அந்தப் பள்ளியின் ஊழியா் தண்டாயுதபாணி, மகேஷ் வீட்டுக்குச் சென்றாா். வீட்டைக் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த தண்டாயுதபாணி, சிபிஎஸ்இ அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் அங்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு ஓா் அறையில் மகேஷ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

திருமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கினறனா்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகளை, பல்வேறு வழக்குக... மேலும் பார்க்க