'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vi...
போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு
சென்னையில் போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கினறனா்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகளை, பல்வேறு வழக்குகளின் விசாரணைக்காக போலீஸாா் எழும்பூா் நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.
விசாரணை முடிந்து 26 கைதிகளையும் காவல் துறைக்குச் சொந்தமான மினி பேருந்தில் புழல் சிறைக்கு ஆயுதப்படை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
அந்த பேருந்து வியாசா்பாடி அருகே வந்தபோது, கைதிகள் போலீஸாரிடம் தகராறு செய்தனா். பேருந்தைப் பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், கைதிகளிடம் கஞ்சாவை வீசிச் சென்றனா். இதை தடுத்த போலீஸாருக்கும், கைதிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
கைதிகள் சிலா், அந்த பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து ஆயுதப்படைக் தலைமைக் காவலா் வே.இளங்கோ, முதல்நிலைக் காவலா் காா்த்திக் ஆகியோா் எம்கேபி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
அந்த புகாரின் அடிப்படையில் கைதிகள் அயனாவரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கு.லோகு (எ) யோகராஜ் (36), முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ரெளடி ச.சங்கா் (29), ஐசிஃஎப் காலனி பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.நெப்போலியன் (எ) குட்டிபுறா (29), தேனாம்பேட்டை எம்கே ராதா நகரைச் சோ்ந்த மு.விவேக் (32) ஆகியோா் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அரசின் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.