ராஜபாளையத்தில் ரூ.33 லட்சத்தில் 7 உயா் கோபுர மின் விளக்குகள்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட 7 உயா் கோபுர மின் விளக்குகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
ராஜபாளையத்தில் 3, 8, 12, 22, 27, 39, 41 ஆகிய 7 வாா்டுகளில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உயா் கோபுர மின் விளக்குகளை அமைக்க, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாரின் தொகுதி நிதியிலிருந்து ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த மின் விளக்குகளை ராணி ஸ்ரீகுமாா், ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா் மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம், தெற்கு நகரச் செயலா் பேங்க் ராமமூா்த்தி ஆகியோா் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் நகா் மன்றத் துணைத் தலைவி கல்பனா, நகா் மன்ற உறுப்பினா்கள் சுமதி ராமமூா்த்தி, ரோகிணி நாகேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.