விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவா் கைது
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சனிக்கிழமை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்த மன பட்டாசு ஆலை மணியம்பட்டியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் சிலவாரங்களுக்கு முன்னா் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது .இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவாதக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாரனேரி கிராமநிா்வாக அலுவலா் சுதா்சன் தலைமையிலான வருவாய்துறையினா் ஆலையில் சோதனை செய்தனா்.சோதனையில் அந்த பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆலை உரிமையாளா் தங்கப்பாண்டியன்,மற்றும் பாலமுருகன், செந்தில்குமாா் ஆகிய மூவரை கைது செய்தனா்.