இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு துப்புரவுத் தூய்மைக் காவலா் பொது தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.
ராஜபாளையம் அம்பேத்கா் நகா், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நகா், ஜமீன் நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.