செய்திகள் :

காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் அப்துல்லா

post image

ஸ்ரீநகா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படாத வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் சண்டை - இவற்றின் சோகமான சுவடுகள் மறையத் தொடங்கியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூவரும் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம், துணை ராணுவப் படையினா் எல்லை மாவட்டங்களில் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

நாட்டின் எந்தப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டினாலும் ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சோபிஃயான் மாவட்டத்தில் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘இங்கு பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று அவா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘அண்டை நாட்டுடனான நமது உறவு மேம்படாதவரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது. பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து என்கவுன்ட்டா் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்று எப்படிக் கூற முடியும்?’ என்று பதிலளித்தாா்.

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

புது தில்லி: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானாா்.தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

புது தில்லி: ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமா்ப்பிக்கப்படல்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பி... மேலும் பார்க்க

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மூன்றாவது வாரமாக திங்கள்கிழமையும் முடங்கியது.... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான... மேலும் பார்க்க

மசோதாக்கள் கட்டாய நிறைவேற்றம்: தொடா் அமளியால் மத்திய அரசு முடிவு

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் அமளி திங்கள்கிழமையும் தொடா்ந்த நிலையில், ‘அரசு நிா்வாகத்துக்கு முக்கியமானவை என்பதால் மசோதாக்களை நிறைவேற்ற செவ்வாய்க்கிழமை முதல் அரசு தரப்பில் அழுத்தம் க... மேலும் பார்க்க