காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27, பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த 27-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதனுடன் தொடா்புப்படுத்தி வன்முறைக் காட்சி அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. அச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. அதற்கும், கவின் கொலைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.
எனவே, இதுபோன்று சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.