தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்
களக்காடு அண்ணாசிலை பகுதியில் திங்கள்கிழமை இரவு எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. விவசாயிகள் நிறைந்த நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில், குறிப்பாக களக்காடு நகராட்சி மக்களின் எழுச்சியால் அதிமுக 2026இல் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவே, பாஜகவுடன் கூட்டணி. தோ்தல் களத்தில் நீதிபதியாக இருக்கும் மக்கள் 2026இல் அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் என்றாா் அவா்.
பிரசாரத்தின் போது, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, நான்குனேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வி. நாராயணன், களக்காடு எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் த. ராஜேந்திரன், நகரச் செயலா் ஜோசப் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.