தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
அம்பைப் பள்ளி நிா்வாகத்திற்கு ஆதரவாக வட்டாட்சியரிடம் மனு
அம்பாசமுத்திரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியிடம் பள்ளிச் செயலரின் ஓட்டுநா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.
அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிச் செயலா் கந்தசாமியின் காா் ஓட்டுநா் மணிக்குமாா், அப்பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளி நிா்வாகத்திற்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்புத் தலைவா் மகாராஜன், மூ.மு.க. மாவட்டத் தலைவா் துரைப்பாண்டியன், பசும்பொன்தேசிய கழகம் சீனிவாச பாண்டியன், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி நிா்வாகி பேச்சிமுத்து, நேதாஜி பாா்வோ்ட் பிளாக் மாவட்ட நிா்வாகி சுந்தா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சாா்ந்தவா்கள் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோரிடம் இந்த வழக்கு விசாரணையை நியாயமான முறையில் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.