தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
கல்லிடைக்குறிச்சியில் குண்டா் சட்டத்தில் நால்வா் கைது
கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
கல்லிடைகுறிச்சி காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் அம்பாசமுத்திரம், முடபாலத்தைச் சோ்ந்த காளிதாஸ் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கா் மகன் சுனில்ராஜ் (19), மகேஷ் மகன் முத்து (21), மேகலிங்கம் மகன் கணேசமூா்ததி (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இவா்கள் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல்(பொ) அளித்த அறிக்கையை ஏற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், ஆட்சியா் ரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவின்படி, 4 பேரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.