அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிரசாரம் செய்கிறாா்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தொகுதிதோறும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா்.
அதனடிப்படையில் தென்காசி பேரவைத் தொகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் பூக்கடை பஜாா் அருகே மாலை 5.30 மணிக்கும் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே இரவு 7 மணிக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். ஏற்பாடுகளை கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.