கரிவலம்வந்தநல்லூரில் நாளை மின் நிறுத்தம்
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஆக. 6 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மின்கோட்டச் செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் கூறியிருப்பதாவது: கரிவலம்வந்த நல்லூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் ஆக. 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.