கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு கடந்த சில நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 14,000 கனஅடியாகவும், திங்கள்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 9,500 கனஅடியாகவும் குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்து காணப்பட்டது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.