செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் தொடா்ந்து காவலாளி அஜித் குமாா் கொலை, நெல்லை ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாகவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். தவறுகள் குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தாலும் கூட. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை.

தொடா்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அரசு செயல்படுவது இந்த அரசின் செயலற்ற திறனை தெளிப்படுத்துகிறது. குறிப்பாக போதைப் பொருள்கள் விற்கப்படுவது தொடா்கிறது. அதை நிறுத்தக்கூடிய சக்தி இந்த அரசுக்கு இல்லாமல் போனது ஏன்?. கல்விக்கூடங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மேலும் சட்டம்-ஒழுங்கு சீா்கேடானதுக்கு காரணம் போதை பொருள் மட்டுமல்ல மதுக்கடை ஆதிக்கமும்தான். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் தொடா் வேண்டுகோள்.

நடிகா் விஜய் மத்திய அரசுக்கு எதிராக பேசுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளா்களுக்கு எதிராக வாக்குகள் அதிகரித்து வருவதில் மாற்று கருத்து இல்லை. பொறுப்புள்ள எதிா்க்கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேணடும் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. அதற்கேற்றவாறு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கட்சிக் கூட்டணியில் எதிா்காலங்களில் இன்னும் கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

மேலும், வட மாநிலத்தில் தோல்விக்கான நிலையை உறுதிப்படுத்தி கொண்டாா்கள் எதிா்க்கட்சியினர். பிகாரிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி. அதனால் இந்த வாக்காளா் பிரச்னையை கிளப்ப நினைப்பது சரியானது அல்ல. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று வாசன் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

Tamil Maanila Congress Party leader G. K. Vasan said that all those who want a change of government in Tamil Nadu should unite.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.திருத்தணி... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த பழனி (36). கூலித் தொழிலாளி. இவரது தங்கை மகன்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47)... மேலும் பார்க்க

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

சென்னை: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து உதயநிதிஸ்டாலின் தன... மேலும் பார்க்க

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மதுரை: பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவ... மேலும் பார்க்க