முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி...
Agaram: "சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம்..." - கமல்ஹாசன்
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.
ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், மேடையில் பேசிய கமல்ஹாசன், "2017-க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியைத் தொடர முடியவில்லை. இப்போது புரிகிறதா ஏன் நீட் வேண்டாம் என்று.
அந்த சட்டத்தை மாற்றி எழுதக் கூடிய பலத்தை தருவது கல்வி. அதுதான் இந்தப் போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்கவல்லது.
சர்வாதிகார சங்கிலிகளை சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.

ஏனெனில் பெரும்பான்மை உங்களைத் தோற்கடித்து விடும். பெரும்பான்மை மூடர்கள் தோற்கடித்து விடுவார்கள்.
சமுதாயத்தில் கரைந்து போவதுதான் தலைமை. எனக்கு அது புரியும் 70 வயதாகிவிட்டது.
நேற்று முதலமைச்சரிடம் நான் பேசிக் கொண்டிருக்கையில், `NGO-க்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும். அவர்கள் பண உதவி கேட்கவில்லை, அனுமதி கேட்கிறார்கள். அதைக்கொடுத்து விடுங்கள்' என்றேன்.

அதற்கு, `நாங்கள் செய்யத்தான் போகிறோம். செய்துகொண்டிருக்கிறோம்' என்று கூறினார்.
நானும் பங்கு கொண்டிருக்கிறேன். இந்த திட்டம் இவரைப் (சூர்யா) பார்த்துதான் ஐடியா வந்தது என்றால், அதில் அரசுக்கு அவமானம் ஒன்றுமில்லை.
எனவே, நல்லது எதிரியிடம் இருந்தாலும் கேட்கலாம். இவர் நம்ம பிள்ளை. இங்கிருந்து எடுக்காமல் வேறு எங்கிருந்து எடுப்பது." என்று கூறினார்.