செய்திகள் :

``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அறிவிப்பு

post image

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர் படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. குஜராத் மாநில காவல்துறை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சோலா, சந்த்லோடியா பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில், ``பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பாலியல் வன்கொடுமையோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமையோ செய்யப்படலாம்" , ``உங்கள் நண்பர்களுடன் இருண்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். தனிமையில் உங்களை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வீர்கள்?" போன்ற கேள்விகள் அதில் இடம்பிடித்திருந்தன.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

இந்த சுவரொட்டிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த காவல்துறை தரப்பு, ``சதார்க்தா குழுமம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் எங்களை அணுகி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாகவும், காவல்துறை அதிகாரிகளை அதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகள் எங்களுக்குக் காட்டப்பட்டன.

ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் எங்களுக்குக் காட்டப்படவில்லை. மேலும் எங்கள் அனுமதியின்றியே அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. புகார் வந்தற்குப் பிறகு அந்த சுவரொட்டிகளை அகற்றிவிட்டோம்.'' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஜராத் ஆம் ஆத்மி கட்சி, ``குஜராத்தில் உள்ள பா.ஜ.க அரசு பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றிப் பேசுகிறது. ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது.

சுவரொட்டிகள்
சுவரொட்டிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தில் 6,500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் 36-க்கும் மேற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்படுகிறது. முதலமைச்சரும் பா.ஜ.க தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இன்று அகமதாபாத் போன்ற ஒரு பெரிய நகரத்தில், இந்த சுவரொட்டிகள் குஜராத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. குஜராத் பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமா இல்லையா என்பதுதான் முதல்வரிடம் எங்கள் கேள்வி?" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Agaram: "21 வயதில் நானும் ஆசைப்பட்டேன்; அதேபோல சூர்யாவும்..." - கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

Agaram: "உலகத்துல சவாலானது நல்லது செய்றது; யாருக்காக வேண்டும் என்பதில் சூர்யா... " - சு.வெங்கடேசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

Agaram விதை 15-ம் ஆண்டு: "சூர்யா செய்வது மிகப்பெரிய மனிதாபிமான சேவை" - வீரமுத்துவேல் புகழாரம்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிர... மேலும் பார்க்க

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால... மேலும் பார்க்க

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன... மேலும் பார்க்க