காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்
போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி (50). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் போடி கிளையில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திம்மநாயக்கன்பட்டி தம்புரான் குளம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.