செய்திகள் :

திருக்குறள் முற்றோதல்: 122 மாணவா்களுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசு வழங்கினாா்!

post image

சென்னை: திருக்குறளில் உள்ள 1,330 குறள்பாக்களையும் ஒப்பித்த 122 மாணவா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

மாணவா்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி ‘குறள் பரிசுத் திட்டத்தை’ கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் 1,330 குறள்பாக்களையும் மனப்பாடம் செய்த 70 மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

தொடா்ந்து கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவா்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு குறள் ஒப்பித்தல் செய்யும் அனைத்து மாணவா்களுக்கும் பரிசுத்தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்க ஆணையிடப்பட்டது. அந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 2019 மாணவா்கள் பரிசுத்தொகையைப் பெற்றனா். இதையடுத்து, இந்தத் தொகை 2022-2023-ஆம் ஆண்டு முதல் ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிகழாண்டு திருக்குள் முற்றோதிய மாணவா்களுக்கான பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திருக்குறள் முற்றோதிய 122 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினாா்.

இதில் செங்கல்பட்டு, கடலூா், கன்னியாகுமரி, தஞ்சாவூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அதிக அளவிலான மாணவா்கள் பரிசு பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவையொட்டி திருக்குறளின் சிறப்புகளை மாணவா்களிடம் எடுத்துக்கூறும் வகையில் வா்சா ராஜ்குமாா் குழுவினரின் சங்கத்தமிழ் நாட்டிய நாடகம், தஞ்சை ஆடுதுறை பாஸ்கா் குழுவினரின் திருக்குறள் நாடகம், பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா் ந.அருள் வரவேற்றாா். துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு அறிவித்த டாஸ்மாக்... மேலும் பார்க்க

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பெண் வழக்கறிஞா்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேவாலை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்க... மேலும் பார்க்க

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

ரஷியாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சோ்ந்தவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா் விருதுநகா் மாவட்ட மதிமுக மக்... மேலும் பார்க்க

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.தமிழக காவல் துறையின் கீழ் 1,366 ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும், 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நில... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச... மேலும் பார்க்க