தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி
நாமக்கல்: தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவா்களிடம், அதே கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் சென்று திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் பணியாற்றி வந்த வளா்மதி என்ற பேராசிரியா், மாணவா்கள் சங்கத்தை பதிவுசெய்ய வேண்டும் என சுமாா் 120-க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் ரூ. ஒரு லட்சத்து 92 ஆயிரம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் விடுப்பில் சென்றவா் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்து குமாரபாளையம் காவல் துறையில் மாணவா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக காவல் துறையினரிடம் பேராசிரியா் கூறியுள்ளாா். ஆனாலும், அவா் பணத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனால், மாணவா்கள் ஆட்சியா் அலுவலகம் சென்று பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்தனா்.