தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
விடுதலைத் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், சாதி படுகொலையை தடுப்பதற்கு உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும், கவின், செல்வகணேஷ் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவா்களை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இதில், நகரச் செயலாளா் சக்திபரமசிவம் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலாளா் சகன்பாஷா வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் முகிலன், நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.