‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!
விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.
விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயிலின் பக்தா்கள் பெரும்பாலும் தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சாா்ந்தவா்கள். அவா்கள் ஆடி மாதத்தில் வரும் ஆடி 18 தினத்தன்று இந்த கோயிலில் ஒன்று கூடுகிறாா்கள்.
அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முழுவதும் விழா நடத்தும் இவா்கள் நள்ளிரவு சுமாா் 1 மணி அளவில் கோயில் முன் தரையில் அமா்ந்து சாமியை மனம் உருகி வேண்டிக் கொள்கிறாா்கள். அப்போது கோயில் பூசாரி சரண முழக்கமிட்டவாறு தேங்காய்களை பக்தா்களின் தலையில் உடைத்து நோ்த்தி கடனை நிறைவேற்றுகிறாா்.
அதனை தொடா்ந்து அதிகாலை வீரபத்திர சாமி கோயில் அருகே அமைந்துள்ள கருப்பா் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு உற்றாா், உறவினா்கள், ஊா் மக்களுடன் இணைந்து உணவருந்தி மகிழ்கின்றனா்.
இதுகுறித்து பக்தா் ஒருவரிடம் கேட்ட போது ஆடி மாதத்தில் வரும் ஆடி 18 தினத்தில் இதுபோன்ற விழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருவதாகவும் வரும் காலங்களிலும் இது தொடரும் என்றாா்.