தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி செல்வி (48). இவா் அங்குள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றாராம்.
திருநெல்வேலி - ஒட்டப்பிடாரம் நெடுஞ்சாலையில் கண்டகருப்பன் தோப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன், செல்வி மீது உரசியதில் கீழே விழுந்து காயமடைந்தாா். அவா் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரான வடக்கு ஆரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாரைக் கைதுசெய்தனா்.