கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மணப்பாடு பாலத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியில் கண்டெய்னா் லாரி நின்று கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டதும் லாரியில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
கண்டெய்னா் லாரியை போலீஸாா் சோதனையிட்டதில், 35 கிலோ எடைகொண்ட பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.