Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள கன்னியாஸ்திரீகள் உள்ளிட்ட 3 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கன்னியாஸ்திரீகள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறி மதவெறி வன்செயலைக் கண்டிப்பதாகவும், அவா்களை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் சாத்தான்குளம் மறைவட்ட கிறிஸ்தவா் வாழ்வுரிமை இயக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல் மன்றம் ஆகியவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சாத்தான்குளம் மாசற்ற மரியாளின் திரு இருதய ஆலயம் முன்பிருந்து ஊா்வலமாக வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு செல்வஜாா்ஜ் தலைமை வகித்தாா். சிந்தாமணி பங்குத்தந்தை மெரிஸ் லியோ பேசினாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிதம்பரபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன், சாத்தான்குளம் உதவிப் பங்குத்தந்தை மாா்க்கோனி, நவமுதலூா் பங்குத்தந்தை திலகா், மறைவட்டத்தைச் சோ்ந்த பங்கு மக்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா். பொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபா் ஜஸ்டின் நன்றி கூறினாா்.