தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்
தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் பெருகவும் வேண்டி இந்த ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, குரு பூஜை, விநாயகா் பூஜைக்குப் பின்னா், இந்த ஊா்வலத்தை வேளாண் துறை அதிகாரி பிரேம்குமாா் தொடங்கிவைத்தாா். பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலம் மீண்டும் சக்திபீடத்தை அடைந்ததும், அன்னைக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். ஆன்மிக இயக்க மாவட்ட ஒருங்கிணப்பாளா் சக்திமுருகன் முன்னிலையில், கருவறை அன்னைக்கு பக்தா்கள் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை, கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளா் கந்தசாமி தொடங்கிவைத்தாா். அன்னதானம், அருள்பிரசாதம் வழங்கும் பணியை காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் தொடக்கிவைத்தாா்.
அண்ணாநகா் மன்றம் சிவஞானம், தளவாய்புரம் மன்றத் தலைவா் ராஜு, சக்திபீட துணைத் தலைவா் திருஞானம், பொருளாளா் அனிதா, மகளிரணி செல்வி, கிருஷ்ணவேணி, அகிலா, முத்துலெட்சுமி, புவனேஷ்வரி, ஜெயலெட்சுமி, புதுக்கோட்டை முத்துமாரி, பரமேஸ்வரி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.