கிருஷ்ணகிரிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினா் தீவிரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் அதிமுகவினா் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 11, 12 -ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
ஆக.11-ஆம் தேதி தளி, ஒசூா், வேப்பனப்பள்ளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 12-ஆம் தேதி கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப்பேரைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளாா்.
அவரை வரவேற்கும் வகையில், பா்கூா் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் தலா ரூ. 70,000 மதிப்பிலான 6 பெரிய பலூன்களை பா்கூா் நகரின் முக்கிய பகுதிகளில் பறக்க விட்டுள்ளாா்.
பா்கூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இந்த பலுான்களை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) பறக்கவிட்டாா். இதில் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.