புதுச்சேரி பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் வசதி
புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இலவச குடிநீா் வசதியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
முதல்வா் ரங்கசாமியின் பிறந்தநாளை ஒட்டி பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் இயக்கி வைத்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், அமைச்சா் ஜான் குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திர பிரியங்கா, வி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, எல். சம்பத், உ.லஷ்மிகாந்தன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.