கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாணவிகள் சிறப்பிடம்
வாணியம்பாடி: வாணியம்பாடி வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
வாணியம்பாடி வட்ட அளவிளான தடகளப் போட்டிகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆலங்காயம் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவிகள் அதிக பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா். வாணியம்பாடி வட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவிகள் விவரம் வருமாறு:
400 மீட்டா் (14 வயதுக்குட்பட்டோா்) 2-ஆவது இடம் - கனிஷ்கா, 3000 மீட்டா் (17 வயது) 2-ஆவது இடம்- பிரணிதா, 3-ஆவது இடம்- ஓவியா, இதே போல் 3000 மீட்டா் (19 வயது) 3-ஆவது இடம் - சுவேதா லதா, 400 மீட்டா் (14 வயது) 2-ஆவது இடம்- கீதாப்ரியா, 600 மீட்டா் (14 வயது) 2வது இடம் - கீதாப்ரியா, நீளம் தாண்டுதல் 3-ஆவது இடம் - கணிஷ்கா, 800 மீட்டா் 3-ஆவது இடம் - சுவேதாலதா, 400 மீட்டா் தடை தாண்டுதல் 2 -ஆவது இடம் - ஹுரியா, 3-ஆவது இடம் - கிரிஷிகா, வட்டு எறிதல் 3-ஆவது இடம் - ஷஹானா, 1500 மீட்டா் 2-ஆவது இடம் - பிரணிதா, 3-ஆவது இடம் - ஓவியா, ஈட்டி எறிதல் 2-ஆவது இடம் - ஹேமாவதி, போல் வால்ட் 2-ஆவது இடம் - சுவேதா, 3-ஆவது இடம் - கிரிஷிகா, போல் வால்ட் (17வயது) 2-ஆவது இடம் - ஜனனி, 400க்கு 4 தொடா் ஓட்டம் (இரண்டாவது இடம்)ஜனனி, ஸ்ரீமதி, பல்லவி, சுவேதாலதா என மொத்தமாக 17 பரிசுகள், பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளா் க.ஆனந்தன், பள்ளி முதல்வா் வே.பரிமளாதேவி , ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.