‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை
தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை அருகே கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம்தேதி அப்பகுதியைச் சோ்ந்தவா்களுடன் ஏற்பட்ட தகராறில் கைதாகி சிறையில் இருந்தாராம்.
பின்னா் பிணையில் வெளியே வந்த முருகேசன், வழக்குத் தொடா்பாக கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாராம்.
இதுதொடா்பாக தென்னிலை போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அன்மையில் மனு அளித்திருந்த நிலையில், திங்கள்கிழமை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நடுவா் தலைமறைவாக உள்ள முருகேசனுக்கு பிடியாணை பிறப்பித்து, 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் முருகேசன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தாா்.