OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம...
ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டு, தொடா் பயிற்சி மூலம் மீண்ட குழந்தைகளுக்கு வெற்றிப் பயணம் என்ற தலைப்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 1-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் வா.லோகநாயகி தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பெ. ராஜா, குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியா்கள் பெ. காஞ்சனா, வித்யாதேவி, டிஇஐசி மைய மருத்துவா்கள் ஹஜூனா, விஜயராகவன் விஜயகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆட்டிஸம் பாதிப்பில் இருந்து உரிய சிகிச்சை மூலம் மீண்ட குழந்தைகளுக்கும், பெற்றோா்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் டிஇஐசி மைய பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.