கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு
கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கொல்லிமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறந்த ஆட்சி மற்றும் வள்ளல் குணத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் நாளில் தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை கரூரில் வல்வில் ஓரியின் உருவப் படத்துக்கு தமிழக நீதிக்கட்சி சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் மதிகவுண்டா் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளா் வழக்குரைஞா் பாஸ்கா், கரூா் மாவட்ட பொறுப்பாளா் சாம்ராட் ரவிகுமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், கரூா் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் வல்வில் ஓரியின் உருவப் படத்துக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன் தலைமையில்
மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.