செய்திகள் :

ட்ரம்ப் மிரட்டல்; ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் நிலைமை என்ன ஆகும்?

post image

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், 25 சதவிகித வரி பிளஸ் அபராதத்தை இந்தியா மீது விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல... சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் எண்ணெயை வாங்கி வருகிறது.

ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவால், இந்தியாவிற்கு என்ன பாதிப்பு என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"நாங்கள் ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை. எங்கள் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக எது சரியோ, அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று நேற்று திட்டவட்டமாக சீனா கூறிவிட்டது.

உங்கள் மிரட்டலுக்கு பயந்து நாங்கள் ரஷ்யா உடனான வணிகத்தை நிறுத்தி விடமாட்டோம் என்று சீனா தெளிவாக கூறியிருக்கிறது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

ட்ரம்பும், ஆறு இந்திய நிறுவனங்களும்!

இன்னொரு பக்கம், ஈரானுடன் எண்ணெய் ஒப்பந்தம் வைத்திருக்கும் ஆறு இந்திய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் வரி விதித்துள்ளார். இப்படி இந்த ஆறு நிறுவனங்களின் மீது வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?

இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நமக்கு பிளஸ்.

இந்த நிலையில், இந்தியா சீனாவைப் போல முடிவு எடுக்குமா அல்லது அமெரிக்கா சொல்வதைக் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால், ஒன்று, அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து இந்தியா பின்வாங்கி, பிற நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால், இங்கு பொதுமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும்.

இந்திய அரசு பொதுவாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவே குறைக்காது.

கிட்டத்தட்ட 520 நாள்களுக்கு மேலாக, நமது பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

உலக அளவில் மாறிய கச்சா எண்ணெய் விலை

உலக அளவில் இந்த 500 நாள்களில் கச்சா எண்ணெய் 60 டாலர் என இறங்கியும் வந்துள்ளது. 70 டாலர் என்று ஏறியும் உள்ளது. ஆனால், இந்தியாவில் உச்ச வரம்பில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

நாம் பெரியளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவு.

ஈரானிடம் இருந்து வரும் கச்சா எண்ணெயின் விலையும் குறைவு. ஆனாலும், இந்திய அரசு விலையைக் குறைக்கவில்லை. அதில் இருந்து லாபமடைந்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெயை சுத்தம் செய்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. ஆக, இதிலும் லாபம்.

crude oil - கச்சா எண்ணெய்
crude oil - கச்சா எண்ணெய்

இந்திய அரசிற்கு இருக்கும் 2 பின்னடைவுகள்

இந்த நிலையில், அரசாங்கம் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, விலை இன்னமும் அதிகரிக்கும்.

பல மாநிலங்களின் தேர்தல்கள் வர இருக்கும் நிலையில், இது அரசாங்கத்திற்கு பின்னடைவாக இருக்கும்.

இன்னொரு பக்கம், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் போது, போக்குவரத்து செலவு அதிகரித்து, பணவீக்கமும் உயரும்.

ஆக, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டுமா என்பது அரசியல் சார்ந்த முடிவு.

இதை அரசாங்கம் மிகவும் யோசித்து தான் செய்ய வேண்டும்" என்றார்.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

'Vikatan Play'-ல் 'Opening Bell Show'
'Vikatan Play'-ல் 'Opening Bell Show'

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

`விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது?' - உங்கள் கருத்தென்ன? #கருத்துக்களம்

கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் முன்வைத்திருக்கும்... மேலும் பார்க்க

`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில... மேலும் பார்க்க

OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர... மேலும் பார்க்க

Shibu Soren: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஷிபு சோரன் (81) சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவ... மேலும் பார்க்க

``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' என்று கூறி வருகிறார்.இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு. தற்போது நாடாளும... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் 'முட்டா பயலே' என சொல்லி ம... மேலும் பார்க்க