செய்திகள் :

Rahul: ``மதிப்புக்குரிய நீதிபதிகள் தீர்மானிக்க மாட்டார்கள்..!" - பிரியாங்கா

post image

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ``கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது. உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள்" என ராகுல் காந்தியை விமர்சித்திருக்கிறது. இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ``மதிப்புக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கிறேன். அதே நேரம், உண்மையான இந்தியர் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்க மாட்டார்கள். ஆளும் அரசைக் கேள்வி கேட்பது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை.

priyanga gandhi - rahul gandhi
priyanga gandhi - rahul gandhi

என் சகோதரர் ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராகப் பேச மாட்டார், அவர் அவர்களை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறார்." என்றார். காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், ``ராகுல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகள் தேவையற்றது. நமது எல்லைகளைப் பாதுகாக்க அரசு தவறும்போது, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமையாகும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

TVK: "அதே பிரமாண்டத்தோடும் உற்சாகத்தோடும் நடைபெறும்" - மதுரை மாநாடு மாற்று தேதியை அறிவித்த விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரி 24 மணி நேரத்தில் உயரும்" - மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்!

இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரி... மேலும் பார்க்க

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?

உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது. அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜ... மேலும் பார்க்க