திண்டுக்கல்: குழந்தைகளை ஏலம் விடும் பெற்றோர்... தேவாலயத்தில் வினோத திருவிழா!
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்து, முஸ்லீம், கிருஸ்துவம் என மும்மதத்தை சேர்ந்தவர்களும் திருவிழாவில் பங்கேற்பது இந்த கோவிலின் சிறப்பு. அதன்படி இன்று காலை முதல் மும்மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்திற்கு வந்தனர்.

இந்த கோவிலில் முக்கிய நிகழ்வாக... திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து குழந்தையை கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் சொல்கின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களை எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்கும் மக்கள் கூடுகின்றனர்.