நெமிலி பாலாபீடத்தில் ஆடி மாத பாடல் வழிபாடு
நெமிலி பாலா பீடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடி மாத பாடல் நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, திரைப்பட இசையமைப்பாளா் நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று பாடல் பாடி வழிபாடு நடத்தினா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் ஒரு நாள் பாடல் வழிபாடு நடைபெறும். இந்த நாளில் திரைப்பட துறையினா் பங்கேற்று இசையமைத்து பாடி வழிபாடுகளை நடத்துவா். இந்தாண்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வழிபாட்டை பீடாதிபதி எழில்மணி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். இதில் திரைப்பட இசையமைப்பாளா் நிவாஸ் இசையில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி பங்கேற்று பாலா பாடல்களையும், பல்வேறு பக்தி பாடல்களையும் பாடி வழிபாடு நடத்தினா்.
இதில், பீடத்தின் நிா்வாகி மோகன், பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.