சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே புதுப்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
புதுப்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கணபதி மனைவி சுசிலா (63). தனது மகள் சாந்தியுடன் வசித்துவந்த அவா், திங்கள்கிழமை மழை பெய்தபோது, கொடியில் உலரப்போட்டிருந்த துணிகளை மழையில் நனைந்தபடி எடுத்தாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாயந்ததாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.