தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு
தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்புக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தூத்துக்குடி, குரூஸ்புரம் பகுதியைச் சோ்ந்த ஒயிட் என்பவருக்குச் சொந்தமான ஐஸ் தயாரிப்புக் கூடம், கீழஅலங்காரத்தட்டு, ஜான் சேவியா் நகரில் மீனவா் காலனியில் உள்ளது. இந்தக் கூடத்தில் இருந்து, திங்கள்கிழமை இரவு அமோனியா வாயு கசிந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா், அமோனியா வாயு கசிவைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாநகர துணைக் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த ஐஸ் தயாரிப்புக் கூடத்தில் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாததே அடிக்கடி அமோனியா வாயு வெளியேறி பாதிப்புக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.