Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
தீவிபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
கயத்தாறு அருகே தீவிபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த வில்லிசேரியில் உள்ள குமரன் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் செல்வராஜ் (54). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள், மகள் கௌசல்யா. இவா்கள் கடந்த ஜூன் 13ஆம் தேதி கொசுவா்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்துவைத்து தூங்கினராம். அப்போது, காற்று காரணமாக, கொசுவா்த்தியின் தீப்பொறி அருகேயுள்ள சாக்கில் விழுந்து தீப்பற்றி, மாரியம்மாளின் சேலையிலும் தீப்பிடித்ததாம். இதில், அவரும், காப்பாற்ற முயன்ற செல்வராஜும் காயமடைந்தனா்.
அவா்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.