செய்திகள் :

`தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு!' - ஆதவ் அர்ஜுனா

post image

சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னை மாநகராட்சியின் குறிப்பிட்ட மண்டலங்களைச் சேர்ந்த அரசு ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணி பாதுகாப்பு உட்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாரிடம் கொடுக்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகளை ஏற்க வேண்டும்' என்றெல்லாம் பேசினார் இன்றைய முதல்வர் அவர்கள்.

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்

வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு

ஆனால் இப்போது, மாநகராட்சியின் பராமரிப்பு பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து, ஒருசிலர் பயனடைய ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு. போராடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள், முதியவர்கள் என்றும் பார்க்காமல் ஐந்து நாட்களாக வீதியில் போராடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று தொழிலாளர்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி வயிற்றில் அடித்து வருகிறது திமுக அரசு. சாமானிய மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றமான அரசு வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டு என்ன சமூகநீதியைப் பேசப்போகிறீர்கள்?. சமூக அநீதியை மட்டுமே ஆட்சியாக நடத்திவரும் அரசுக்கு எதிராகச் சென்னையில் போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், கழகத் தோழர்கள் ஆகியோரோடு நேற்று சந்தித்தோம்.

அடிப்படை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களோடு போராட்டக் களத்தில் பங்கேற்றோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், பணிப்பாதுகாப்பு உரிமைக்கும் சட்ட அடிப்படையிலும், ஜனநாயக களத்திலும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தோம்' இவ்வாறு கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ - முதல்வரை சந்தித்த திருமாவளவன்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தனிச்சட்டம் தேவை என திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: `தப்பிக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன்?’ - அண்ணாமலை சொல்லும் 3 காரணங்கள்

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் பணியின் போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சென்ற அழகுராஜா என்ற ஆயுதப்படைக் காவலர் காயமடைந்து... மேலும் பார்க்க

ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா: திமுக கூட்டணியை விரும்புகிறதா தேமுதிக? இதில் திமுக கணக்கு என்ன?

'நட்பு ரீதியான சந்திப்பு' கடந்த ஜூலை 31 அன்று, முதல்வர் ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "முதல்வர் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க