செய்திகள் :

ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா: திமுக கூட்டணியை விரும்புகிறதா தேமுதிக? இதில் திமுக கணக்கு என்ன?

post image

'நட்பு ரீதியான சந்திப்பு'

கடந்த ஜூலை 31 அன்று, முதல்வர் ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் அவரைச் சந்தித்தோம். கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, முதல்வர் நேரில் வந்து நலம் விசாரித்தார். அதுபோலவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது" என்றார்.

மேலும், "தே.மு.தி.க.வை வலுப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இப்போது கூட்டணிப் பேச்சுக்கே இடமில்லை. இன்னும் ஏழு அல்லது எட்டு மாதங்கள் உள்ளன. அதுவரை மக்கள் சந்திப்பும், தொண்டர்கள் சந்திப்பும் மட்டுமே நடைபெறும்" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா
ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

நடந்தது என்ன?

பிரேமலதா வெளிப்படையாக மறுத்தாலும், இந்த சந்திப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காகவும் தான் நடந்தது என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர்கள் சிலர். அவர்கள் அளித்த தகவலின்படி, "முதலில் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும், மு.க.முத்துவின் மறைவுக்கு ஆறுதல் கூறிய பிரேமலதா, பின்னர் அரசியல் பேச்சுக்குத் திரும்பினார். 'அ.தி.மு.க. ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டது. இனி அந்த கூட்டணியில் நீடிக்க விருப்பமில்லை. எங்கள் தொண்டர்களும் தி.மு.க. கூட்டணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். எங்களுக்கு ராஜ்ய சபா சீட்டுகள், மற்றும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தனை தொகுதிகள் வேண்டும்' என்று இரட்டை இலக்கில் ஒரு எண்ணிக்கையும் பிரேமலதா தரப்பில் தங்களின் விருப்பமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு முதல்வர் தரப்பு, "நாங்கள் ஒன்றை இலக்கில் சட்டமன்றத் தொகுதிகளைத் தருகிறோம். அத்துடன் ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் உறுதியாக வழங்கப்படும். தே.மு.தி.க. போட்டியிடும் இடங்களில் கண்டிப்பாக வெற்றிக்காக உழைப்போம்" என்று கூறியிருக்கிறது. இதைக் கேட்ட பிரேமலதா, "யோசித்துச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா
ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் ஏன் இணைய விரும்புகின்றன?

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், தே.மு.தி.க.வை ஏன் கூட்டணிக்குள் கொண்டு வர தி.மு.க விரும்புவதற்கான காரணம் குறித்து பேசிய விவரப்புள்ளிகள், "தி.மு.க, ம.தி.மு.க உறவு சரியாக இல்லை. இதற்கு ம.தி.மு.க. நிர்வாகிகளின் முதல்வர் மீதான விமர்சனங்களும், துரை வைகோவின் பா.ஜ.க.வுடனான நெருக்கமும் தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தே.மு.தி.க.வை கூட்டணிக்கு கொண்டு வர தி.மு.க. விரும்புகிறது.

மேலும் கடந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியை எதிர்கொண்டு தே.மு.தி.க. கடும் சவாலை உருவாக்கியது. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் வாக்குகள் அதிகரிக்கும் என தி.மு.க. கணக்கு போடுகிறது. இன்னொரு பக்கம் விஜயின் அரசியல் வருகையும் வாக்குகளை பிரிக்கலாம். இதனால் வாக்குகளை ஒருங்கிணைக்க கூடிய தேவை திமுகவுக்கு இருக்கிறது. மேலும் பிரேமலதா நன்கு பேசக்கூடியவர். அவரை பிரச்சாரத்தில் பயன்படுத்துவது களத்தில் கைகொடுக்கும் என்றும் தி.மு.க. கருதுகிறது.

இதேபோல் பிரேமலதா தி.மு.க பக்கம் வர விரும்புவதற்கான பின்னணி குறித்தும் அரசியல் நோக்கர்கள், "தொடர் தோல்விகள், விஜயகாந்தின் மறைவால் தே.மு.தி.க பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தசூழலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க, திருவள்ளூர் மற்றும் வடசென்னையில் டெபாசிட் இழந்தது. விருதுநகரில் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, ராஜ்யசபா சீட் பெற்று சகோதரர் சுதீஷை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப நினைத்தபோது, 'ராஜ்யசபா சீட் தருவதாகச் சொல்லவில்லை' என அ.தி.மு.க தரப்பு கூறியது.

பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி

இது பிரேமலதாவை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டால் கோபமடைந்த பிரேமலதா, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அப்போது பெரும்பாலான தே.மு.தி.க நிர்வாகிகள், 'தி.மு.க. கூட்டணிக்குச் செல்லலாம்' என, வலியுறுத்தினர். எனவேதான் பிரேமலதாவும் தி.மு.க. பக்கம் செல்ல முடிவு செய்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதை தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு வந்தார். ஆனால், பிரேமலதா கூடுதல் இடங்கள் கேட்டதால் பேச்சுவார்த்தை தேக்கமடைந்தது. அ.தி.மு.க.வின் ராஜ்யசபா சீட் மறுப்பு காரணமாக, பிரேமலதா தனது நிலைப்பாட்டை தளர்த்தி, முதல்வரைச் சந்தித்திருக்கிறார். எனினும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த சந்திப்பு வெறும் தொடக்கம்தான். பேச்சுவார்த்தைகள் எந்தத் திசையை நோக்கி நகர்கின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!" என்றனர்.

பிரேமலதா சாய்யிஸில் விஜயும் இருக்கிறார். எனினும் தனது கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை கட்டாயம் சட்டசபை செல்ல வேண்டும் என்ற நெருக்கடியிலும் இருக்கிறார். அதனால் தன் முன்னால் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து, வழக்கம் போல தேர்தல் நெருக்கத்தில் தான் முடிவெடுப்பார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ - முதல்வரை சந்தித்த திருமாவளவன்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தனிச்சட்டம் தேவை என திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: `தப்பிக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன்?’ - அண்ணாமலை சொல்லும் 3 காரணங்கள்

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் பணியின் போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சென்ற அழகுராஜா என்ற ஆயுதப்படைக் காவலர் காயமடைந்து... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு!' - ஆதவ் அர்ஜுனா

சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா. இதுகுறித... மேலும் பார்க்க

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க