ரெட்ட தல டீசர் அப்டேட்!
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (ஆக. 7) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!